அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முகூர்த்தக்கால் நிகழ்வு நடைபெற்றது.;
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற ஜனவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இன்று முகூர்த்தக்கால் நிகழ்வுவினை முத்தாலம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டவர்கள் பலர், ஜல்லிக்கட்டுக்கு வந்து, இந்த வீர விளையாட்டை கண்டு ரசிப்பர். வெளிநாட்டவர்களை, மதுரை சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர், மதுரையிலிருந்து கார்கள் மூலம் அழைத்து வரும் முறையானது நடைமுறையில் வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை,விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.