சோழவந்தானில் மூக்கையா தேவர் பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை
பி.கே. மூக்கையாத்தேவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.;
சோழவந்தானில் பி.கே. மூக்கையா தேவர் பிறந்த நாளையொட்டி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் கல்வி தந்தை பி. கே. மூக்கையா தேவர் பிறந்த நாளையொட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் , வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் முருகேசன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பி.கே. மூக்கையாத்தேவர் என்பவர் தமிழ்நாடு அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.