சோழவந்தான் பேரூராட்சிக் கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சியில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

Update: 2022-04-27 11:58 GMT

சோழவந்தான் பேரூராட்சி மாதந்திர கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், இன்று காலை மாதாந்திர கூட்டம் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சுதர்சன் , துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கலந்து கொண்ட அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள், அன்பளிப்பு எங்களுக்கு வேண்டாம், மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பேசியதால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், கூட்டத்தில் பேசிய அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவருமான கொரியர் கணேசன், மூன்றாவது வார்டில் ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, உள்ள நாலாவது வார்டுக்கு ரேஷன் கடை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், வெறும் 190 ரேஷன் கார்டு மட்டுமே உள்ளது. எனது வார்டில் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு உள்ளது. ஆகையால், 3 மற்றும் 4வது வார்டுகளை இணைத்து இரண்டு வார்டுக்கும் பொதுவான இடத்தில் ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News