மதுரை அருகே காரில் கொண்டுவரப்பட்ட, பணம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி..!
சோழவந்தான், வாடிப்பட்டியில் ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்து 23 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், - வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த
போது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்தி 23 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் . செய்யப்பட்டது.
இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ஆறு லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் தாசில்தார் விசாரணைக்கு பின்பு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில், பறக்கும் படையானது, கார், வேன், சந்தேகம்படியாக செல்லும் வாகனங்களுக்களை, தடுத்தும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கணக்கில் வராத பணம் சிக்கினார், அதே மாவட்ட கருவூலத்தில் செலுத்தி விடுகின்றனர். உரிய ஆவணங்களை காண்பித்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதை தடை செய்வதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. அந்த பறக்கும் படையினர் முக்கிய வழியாக வரும் கார்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான கார்கள், பைக்குகள் போன்றவைகளை சோதனை செய்து வருகின்றனர். சில நேரங்களில் போலீசாருக்கு கார் நம்பரை சொல்லி பணம் கொண்டுவரப்படுவதாக ரகசிய தகவலும் கிடைக்கிறது. அதை வைத்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.