மதுரை அருகே அலங்காநல்லூரில் பள்ளி மாணவர்களை வரவேற்ற எம்.எல்.ஏ.
சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாணவிகளுக்கு இனிப்பு , பேனா வழங்கி வாழ்த்தினார்;
அலங்காநல்லூரில் பள்ளி மாணவர்களை சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ, 500 நாட்களுக்கு பின்னர், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்கப்பட்டபோது, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாணவிகளுக்கு இனிப்பு , பேனா வழங்கி வாழ்த்தினார் . இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், ஓன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், நகரச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கடச்சனேந்தல் கேசவன், இறைஞர் அணி சந்தன கருப்பு, ரகுபதி, சந்திரன். தலமை ஆசிரியை சர்மிலாதேவி ஓன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு, வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.