அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமையவுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு விளையாட்டு மைதானம் அமையும் இடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.;

Update: 2022-09-18 13:01 GMT
அலங்காநல்லூர் அருகே  ஜல்லிக்கட்டு மைதானம் அமையவுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு விளையாட்டு மைதானம் அமையும் இடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

  • whatsapp icon

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் குட்டி மேக்கிபட்டி ஊராட்சி கீழக்கரை உள் கடை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்த்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி .மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர். டி.ஆர்.ஒ.சக்திவேல்-தாசில்தார் நவநிதகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் செல்வம், துணைத் தலைவர் வணங்காமுடி மற்றும் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பரந்தாமன், தனராஜ், நடராஜன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோரவேல் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் சேகதீஸ்வரி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மகேந்திரன், செந்தில் குமார், கூட்டுறவு சங்க தலைவர் முத்தையன், வருவாய்துறை, நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணி துறையினர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News