அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் அமைச்சர் திறப்பு
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாரைப்பட்டியில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், சோழவந்தான் தொகு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஓன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், ஓன்றியக்குழுத் தலைவர் பஞ்சு அழகு, துணைத் தலைவர் சங்கிதா மணிமாறன், ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலெட்சுமி முத்தையன், மாவட்ட கவுன்சிலர் முத்துபாண்டி, ஜெயசீலன், மாவட்ட மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஓன்றியக் கவுன்சிலர்கள் ஜெகதீஸ்வரி, வசந்தி, கலைமாறன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.