திமுகவை விட்டுசுயேட்சையாக களமிறங்கிய கோடீஸ்வர வேட்பாளர் மருதுபாண்டியர்
ஆளும் கட்சியான திமுக வேட்பாளர்களை எதிர்த்து, திமுகவினரே களமிறங்கியுள்ளதால் சோழவந்தானின் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திமுகவில் சீட் கொடுக்காததால் சுயேட்சையாக களம் இறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 18-வார்டு உறுப்பினர் பதவிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இப்பகுதியில் பிரபலமாக உள்ள திமுகவை சேர்ந்த தொழிலதிபர் எம்.வி.எம் மருது என்பவருக்கு, திமுகவில் சீட் வழங்க மறுத்துள்ளனர்.
இதனால் வருத்தமடைந்த தொழிலதிபர் மருதுபாண்டியன் திமுகவை எதிர்த்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க 8வது வார்டில் அவரும், 13 வது வார்டில் அவரது அம்மா வள்ளியம்மாளும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் சோழவந்தான் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆளும் கட்சியான திமுக வேட்பாளர்களை எதிர்த்து, திமுகவினரே களமிறங்கியுள்ளதால் சோழவந்தான் தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.