மன்னாடிமங்கலத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த தினவிழா கொண்டாட்டம்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தினவிழாவை, அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அவருடைய திருவுருவப் படத்திற்கு, தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி மாலை அணிவித்தார். அவைத்தலைவர் பூசணி செல்வம் கொடியேற்றி வைத்தார் .
விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார். இதில், பாலு முதலியார், காமாட்சி, சக்திவேல், ஜெயலட்சுமி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.