கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுப்பயணம்
கிராம மக்கள் அளித்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வெங்கடேசன் எம்.எல்.ஏ;
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில், கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுபயணம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார். வடுகபட்டியிலிலும், நகரியிலும் பொது மக்களிடம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மனுக்களை பெற்றார். கிராம மக்கள் அளித்த மனுக்களை படித்து பார்த்து உரிய நடவடிக்கை அரசு அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும் என வெங்கடேசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அவருடன், சுற்றுபயணத்தில் திமுக நிர்வாகிகள், திருவேடகம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.