மதுரை : சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

Update: 2021-09-16 09:15 GMT

சோழவந்தான் அருகே மேலக்கால் அருள்மிகு காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தின் போது, கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால், அருள்மிகு காளியம்மன் கோவில், மகா கும்பாபிஷேக விழா, இரண்டு நாள் நடைபெற்ற்றது. முதல் நாளில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரசாத் சர்மா தலைமையில் அர்ச்சகர்கள் யாக வேள்வி நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று, காலையில்  காளியம்மன் கோயில் கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, வானத்தில் கருடன் சுற்றி வந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குறைவான பக்தர்களே,   மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை, கிராம முதன்மைகாரர்கள் மற்றும் கிராம கமிட்டியினர் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. காடுபட்டி போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News