தமிழக ஆளுநருக்கு எதிராக வாடிப்பட்டியில் மதிமுக கையெழுத்து இயக்கம்
தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பிட தமிழக முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது;
மதுரை வடக்கு மாவட்டம், வாடிப் பட்டி கிழக்கு ஒன்றிய ம.தி.மு.க. சார்பாக வாடிப்பட்டி பஸ் நிலையத் தில் கையெழுத்து இயக்கம் நடந்த து. இந்த இயக்கத்திற்கு, மாவட்ட செயலாளர் மார்நாடு தலைமை வகித்தார்.
தி.மு.க ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், பேரூர் செயலாளர் மு.பால் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் சுபாஆனந்த் வரவேற்றார்.இந்த கையெழுத்து இயக்கத்தில் வியாபாரிகள், விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டனர்.
இதில், ம.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி, அலங்கை ஒன்றிய செயலாளர் தண்டலை ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் சுந்தர், பூ பாண்டி, நந்தகுமார், பால்ராஜ், சின்ன பாண்டி, ராமகிருஷ்ணன், ஜெயக் குமார், கோவிந்தராஜ், குமார், முருகேசன், ராஜேந்திரன், சீனி பாண்டி, அய்யர் தேவர், சுந்தரபா ண்டி, குணசேகரன், சௌந்தர பாண்டி,தி.மு.க.நிர்வாகிகள் பேரூர் அவைத் தலைவர் திரவியம், கார்த்திக் ஜெயகாந்தன் உட்பட வளர்க கலந்து கொண்டனர்.முடிவில், ம.தி.மு.க பேரூர் துணைச் செயலாளர் மோகனகிருஷ்ணன் நன்றி கூறினார்.