சோழவந்தான் பகுதிகளில் ,மருதுபாண்டியர் குரு பூஜை!

சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருதுபாண்டியர் குரு பூஜை துவக்கம்!;

Update: 2023-10-29 08:30 GMT

முள்ளிப்பள்ளம் அகமுடையார் சங்கத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் குருபூஜை:

மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் 222 வது குருபூஜை நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மார்நாட்டான் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். முள்ளிப்பள்ளம் அகமுடையார் சங்க தலைவர் கிருஷ்ணன் என்ற கிட்டு, செயலாளர் முத்து, பொருளாளர் முத்துக்குமார், தெய்வேந்திரன் வண்டிக்காரராசு, மகாமுனி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

சோழவந்தானில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருவுருவப்படத்திற்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை முன்னிட்டு அவர்களது திருவுருவப்படத்திற்கு பேரூர் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் தெய்வேந்திரன் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். குருநாதன் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் முருகன் மனோகரன் ராதாகிருஷ்ணன் அழகர் கருப்பையா சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் சங்கங்கோட்டை கிராமத்தின் சார்பாக மருதுபாண்டியர் குருபூஜை

மதுரை மாவட்டம் ,சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியரின் 22வது குருபூஜை ஒட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு சங்கங்கோட்டை கிராம நல சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தலைவர் வக்கீல் சிவா செயலாளர் சேகரன் பொருளாளர் டாக்டர் சுந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சங்கம் கோட்டை கிராமத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News