பாலமேடு கிராமத்தில் விநாயகர் கோயில் மண்டல அபிஷேகம்...!
பாலமேடு கிராமத்தில் விநாயகர் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
பாலமேட்டில் பால விநாயகர் கோயில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா
அலங்காநல்லூர், ஆக.1.
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்தது முடிந்ததையொட்டி இன்று 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க சிறப்பு யாகவேள்வி 7 வித ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து புனித தீர்த்தங்கள் வைத்து தீபாராதனையை தொடர்ந்து பால விநாயகருக்கு பால், தேன், சந்தனம், அரிசிமாவு உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து பின்னர் பால விநாயகர் சிலை மீது ஊற்றப்பட்டு 48ஆம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.