அலங்காநல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் துவக்கம்
Makkaludan Mudhalvar Scheme Camp அலங்காநல்லூர் பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமைஎம்எல்ஏவெங்கடேசன் துவக்கி வைத்தார்.;
அலங்காநல்லூரில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
Makkaludan Mudhalvar Scheme Camp
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் கேட்டுக்கடை தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், நகரச் செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜுலான் பானு வரவேற்றார்.
Makkaludan Mudhalvar Scheme Camp
இந்த முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தொழிலாளர் நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, இ. சேவை மையம், உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது. இதில், அலங்காநல்லூர் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்திலேயே, முதன் முதலாக தொடங்கப்பட்ட பேரூராட்சி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இதுவாகும். இதில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.