மதுரை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
மதுரை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.;
பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே, மகாலிங்க சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்தின் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளாக தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களிடம் பொறுப்புகளை, முன்னாள் நிர்வாகிகளான தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வேலு, பொருளாளர் மனோகரவேல் பாண்டியன் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில், புதிய உறுப்பினர்கள், பழைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய தலைவர் பொருளாளரிடம் பொறுப்புகளை வழங்கினர்.