சோழவந்தான்; விக்கிரமங்கலம் அருகே மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலம் அருகே மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-06-12 10:38 GMT

விக்கிரமங்கலம் அருகே மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சக்கரப்ப நாயக்கனூர் கிராமம் மோலையூர் எஸ் அய்யம்பட்டி மந்தை அம்மன் மகா கும்பாபிஷே விழா இரண்டு நாட்கள் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் தெய்வச் சிலை தலைமையில் அர்ச்சர்கள் இரண்டு நாட்கள் ஆகம பூஜை நடத்தினர் இன்று காலை விழா குழுவினர் மற்றும் அர்ச்சர்கள் புனித நீர் குடங்களை மேலதாளத்துடன் வானவேடிக்கையுடன் கோவிலை வலம் வந்தனர் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

மந்தையம்மன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு பால் தயிர் உட்பட மகா அபிஷேகம் நடந்தது இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.

முன்னதாக விநாயகர் கோவில் கொல்லிமலை ராக்கம்மாள் கோவில் வீடு காத்த ராக்கம்மாள் கோவில், பேச்சியம்மன் கோவில், சீலைக்காரி அம்மன் கோவில், சாஸ்தா கோவில், அய்யன் கோவில், அய்யனார் கோவில் இவை அனைத்து கோவில்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர் எட்டும் இரண்டும் பத்து தேவர்கள் ஐந்து பூசாரி பெருமக்கள் அய்யனார் குளம் அக்கா மக்கள் மற்றும் கோடாங்கிகள் சக்கரப்ப நாயக்கனூர் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News