சோழவந்தான் அருகே மேலக்கால் காசி விஸ்வநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
மதுரை அருகே சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள, காசிவிஸ்வநாதன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.;
மதுரை அருகே சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள, காசிவிஸ்வநாதன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா 2 நாட்கள் நடந்தது. இந்த விழாவையொட்டி, திருநகர் ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் தலைமையில் இரண்டு நாள் கும்பாபிஷேக யாகவேள்வி நடந்தது.
காலை 10 மணியளவில், விழா கமிட்டியினர் முன்னிலையில் பெரியாண்டி கூட்ட நிர்வாகிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் மேளதாளத்துடன் புனிதநீர்க் குடங்களை எடுத்து யானை மற்றும் குதிரை முன்செல்ல கோவிலை சுற்றி வந்தனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் போட்டனர். மூலவரின் கோபுரத்தின் கலசத்திற்கு மகாஅபிஷேகம் செய்து புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காசிவிஸ்வநாதன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு திருமஞ்சனம்,பால்,தயிர் உள்பட 12 அபிஷேகங்கள் நடந்து மகாஅபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை நடந்தது.பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலக்கால் பெரியாண்டி கூட்டம் மற்றும் விழாகமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.