மதுரை ரயில் நிலைய தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் எடுத்து செல்ல ஒப்படைப்பு
madurai train fire accident relief fund settled மதுரை ரயில் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் 9 பேர் பலியாயினர்.அவரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.;
மதுரையிலிருந்து, விமானம் மூலம் இறந்தவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படுகிறது.
madurai train fire accident relief fund settled
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மதுரை ரயில் நிலையத்தில், அருகே இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதேசம் லக்னாவை சேர்ந்த சுமார் 9 பேர் உயிரிழந்தனர் எட்டுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடலை இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மற்றும் எம்மாமிங் செய்யப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு சென்னை சென்று சென்னையிலிருந்து விமான மூலம் அவர்கள் சொந்த ஊரான லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என, ரயில்வே நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
madurai train fire accident relief fund settled
மதுரை ரயில் நிலைய தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி ஆகியோர் நிவாரணத்தொகையினை வழங்கினர் மேலும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அமைச்சர்கள் மூர்த்தி , தியாகராஜன் மதுரை கலெக்டர் சங்கீதா ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.