சோழவந்தான் மந்தைக்களம் சந்தான மாரியம்மன் ஆடித் திருவிழா கோலாகலம்
சோழவந்தான் மந்தைக்களம் சந்தான மாரியம்மன் ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்கர்கள் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சோழவந்தான் மந்தைகளம் பூக்குழி பொட்டல் சந்தன மாரியம்மன் கோயிலில் ஆடி விழா இன்று நடைபெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பக்தர்கள் ஏற்பாட்டில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா சிறப்பாக கொண்டாடமல், மந்தை களம் பூக்குழி பொட்டல் வளாகத்திலேயே நடந்தது.
இதேபோல், இந்த ஆண்டு ஆடி மாத விழாவை முன்னிட்டு பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். அம்மனுக்கு, பால், தயிர் உட்பட 21 அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனையடுத்து, பக்தர்களுக்கு கூழ் வழங்கியும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. மாலை பூக்குழி பொட்டல் வளாகத்தில், அம்மன் முன்பாக அழகு குத்தி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து தங்களது, நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். சிலர் முடி காணிக்கை செலுத்தினார்கள்.
இரவு பெண்கள் முளைப்பாரி கோவில் முன்பாக எடுத்து அதே இடத்தில் இறக்கி வைத்தனர். கொரோனா மூன்றாவது அலையால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.