சோழவந்தான் அருகே ரிஷபத்தில் தடுப்பூசி முகாம்
சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் தடுப்பூசி முகாம்
சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி முகாம் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு, சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கீர்த்திகா தலைமை தாங்கினார் .
பள்ளித் தலைமை யாசிரியை தெரசா முன்னிலை வைத்தார். சுகாதார ஆய்வாளர் செல்வம் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சிறுமணி என்ற மணி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
உதவித் தலைவர் சிவசாமி, கிராம செவிலியர் கிருஷ்ணவேணி ஆகியோர் தடுப்பூசி போட்டு கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்.