மதுரை அருகே சோழவந்தான் பகுதிகளில் பலத்த மழை: பஸ் போக்குவரத்து பாதிப்பு:
சோழவந்தான் அருகே பலத்த மழை, மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு:;
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால், சோழவந்தான் அருகே குருவித்துறை,மன்ணாடி மங்கலம் பகுதிகளில் மரங்கள் பல வேரூடன் சாலையில் பாய்ந்ததால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர் மழையால்,மின் சப்ளையூம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை நகர் மற்றும் துவரிமான்,கீழமாத்தூர்,கொடிமங்கலம் பகுதிகளிலிலும் மழை பெய்தது.