சமயநல்லூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் விழா
வேளாண்மை துறை, வருவாய் துறை இணைந்து சிறு, குறு விவசாயிகளுக்கான உடனடியாக சான்று வழங்கும் முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்;
மதுரை மாவட்டம் சமயநல்லூரில், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம், வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நடத்திய சிறு,குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் நடைப்பெற்றது .
மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், பங்கேற்ற இம்முகாமில், கிழக்கு மற்றும் மேற்கு வட்டாரங்களை சார்ந்த 94 விவசாயிகளுக்கு சிறு,குறு விவசாயிகள் என்பதற்கான சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது. பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் , பெரிய விவசாயிகளுக்கு 75% சதவீத மானியத்திலும், நுண்ணிர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசனம், சொட்டுநீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் 161 விவசாயிகள் நுண்ணீர் பாசன கருவிகளுக்கு பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி , வேளாண்மை துணை இயக்குனர் இயக்குனர்கள் சுப்புராஜ் , ராணி தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி , கிழக்கு மற்றும் மேற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கமலா லட்சுமி , வடக்கு வட்டாட்சியாளர் முத்து விஜயகுமார் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.