அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது

மதுரை நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-09-17 12:30 GMT

பைல் படம்

வைகை தென்கரரையில் ஒயின்ஷாப் அருகே வாலிபரை வெட்டிய மற்றொரு வாலிபர் கைது.

மதுரை, முனிச்சாலை இஸ்மாயில் புரம் பன்னிரண்டாவது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் கோவிந்தராஜ் 37 .இவருடைய நண்பர் கான் பாளையம் நான்காவது தெருவை சேர்ந்த பாபுஜி மகன் பிரேம்குமாரும் அவருடைய நண்பர்கள் சதீஷ்குமார் அஜய் ஆகிய மூவரும் வைகை தென்கரை ஒயின்ஷாப் அருகே தகராறு செய்துகொண்டிருந்தனர். அவர்களை கோவிந்தராஜ் விளக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கோவிந்தராஜை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் .இந்த சம்பவம் குறித்து, கோவிந்தராஜ் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர் சதீஷ்குமார் அஜய்யை தேடி வருகின்றனர்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தோழியின் கணவர் கைது

மதுரை மாடக்குளம் சோனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகள் பிரியா 25.இவர் தனது தோழியின் கணவர் கருப்பசாமி என்பவரிடம் பழகி வந்தார்.இதனால் கருப்பசாமியிடமிருந்து  தோழி பிரிந்து சென்றுவிட்டார்.இதனால் கருப்பசாமியுடன் பேசுவதை பிரியா தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி பிரியாவின் சித்தி வீட்டுக்குச் சென்று அங்கிருந்து பிரியாவை ஆபாசமாக பேசி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து பிரியா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கருப்பசாமியை கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் வாளுடன் இருந்த வாலிபர் கைது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப் இன்ஸ்பெக்டர் அன்பு தாசன். இவர் போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் திருப்பரங்குன்றம் ரோடு முத்து பாலம் அடியில் சென்றபோது வாலிபர் ஒருவரை வாளுடன் பிடித்தார். அந்த வாளை பறிமுதல் செய்தார் .பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சோலையழகுபுரம் இந்திரா நகர் ஆனந்த் மகன் வைரவேல் 21 என்று தெரியவந்தது. அவர் எதற்காக அங்கு பதுங்கி இருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன் நண்பரை கொலை செய்த நபரை கொலை செய்வதற்காகவும் செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறி செய்வதற்காகவும் பதுங்கியிருந்ததாக வாலிபர் தெரிவித்தார் .அவரை போலீசார் கைது செய்தனர்..

அரசு வேலை வாங்கி தருவதாக  ரூ.15 லட்சம் மோசடி செய்த நபர்  கைது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புது காமன்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகன் செல்வராஜ். மதுரை சொக்கநாதபுரம் இன்கம் டாக்ஸ் அலுவலகம் அருகே சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் சண்முகத்துறை 58. இவரது மகள் அர்ச்சனா. சண்முகத்துறையின் நண்பர் குணசேகரன் .இவர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜுக்கு அவருடைய நண்பர் குணசேகரன் மூலமாக சண்முகத்துறை அறிமுகமானார். இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் தங்களுக்கோ தங்களுக்கு வேண்டிய நப.ருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.

அவர்களின் தகுதிக்கேற்ப வேலைக்கு ஏற்ப பணம் செலவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ் நண்பர் ராஜேந்திரன் உறவினர் ராஜேஷ் இவர்கள் அவர்களுக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளனர் .இதற்காக 2020ல் பல்வேறு கட்டங்களில் ரூ. 15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கிக் தரவில்லை .அவர்களை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து செல்வராஜ் மதுரை மாநகர காவல் துணை கமிஷனரிடம் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துறை அவருடைய மகள் அர்ச்சனா சென்னையைச் சேர்ந்த குணசேகரன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துறையை கைது செய்தனர்.

விபத்தில் சிக்கிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

மதுரை  மதிச்சியம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருவம்மாள் 53. இவர் அந்த பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று அவர் வாகன விபத்தில் சிக்கினார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து குணமடைந்து இடையபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென்று தலைவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் கொடுத்த புகாரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன காவலாளியின் வீடு புகுந்து நகை செல்போன்கள் திருட்டு.

மதுரை நாகமலை புதுக்கோட்டை கொடிமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பிச்சை 57. இவர் மதுரையில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார் .சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிவிட்டார் .அதிகாலை எழுந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் இரண்டு செல்போன்கள் திருட்டு போயிருந்தன . இது குறித்து பிச்சை, நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News