மதுரை மாவட்டத்தில் 2 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் வாக்குவாதம்

மதுரை மாவட்டத்தில் 2 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.

Update: 2021-10-03 09:35 GMT

மதுரை மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்திஜெயந்தி தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை  கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் மற்றும் கருப்பட்டி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திட்ட செலவுகளுக்கு கணக்கு கேட்டும் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரியும்  பொதுமக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலக்கால் ஊராட்சியை சேர்ந்த கீழமட்டையான் கச்சிராயிருப்பு கிராமத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News