மதுரை அருகே இளம்பெண் தீக்குளித்து மரணம்

குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு;

Update: 2021-09-13 13:15 GMT

பைல் படம்

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே தண்டலை செவக்காட்டில், தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: மதுரை மாவட்டம், தண்டலை, செவக்காட்டை சேர்ந்தவர் சித்ரா( 33) . இவர், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்தாராம். ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.  அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News