சோழவந்தான் வட்டாரத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பலத்த மழையால், தணிந்த வெப்பம்:;

Update: 2021-08-09 06:42 GMT

சோழவந்தான் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது. ரோடுகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயிலால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் சாலையோர வியாபாரிகளின் பொருட்கள் மழை நீரில் அடித்து சென்றது. அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் அபிவிருத்தி பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த திடீர் மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News