அலங்காநல்லூரில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

இதையொட்டி யாகபூஜைகள் அன்னதானம் நடைபெற்றது

Update: 2021-09-03 17:06 GMT

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழா 

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், தெப்பக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இந்த விலாவில் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரண்டு கால யாகபூஜைகள், கும்ப அலங்காரம், நடைபெற்று மேலதாளம் முழங்க கடம் புறப்பாடாகி அலயத்தை சுற்றி வலம் வந்து கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடரத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News