அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு

வைகை ஆற்றருகே உள்ள தோப்பில் காலைக்கடனை கழிக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

Update: 2021-08-18 11:09 GMT

சோழவந்தான்  அருகே மின்சாரம் தாக்கியத்தில்  கூலி தொழிலாளி பலியானார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி, நடுத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரஞ்சித்குமார்(31). கூலித்தொழிலாளியான  இவர், இன்று அதிகாலை வைகை ஆற்று அருகே உள்ள தோப்பில், காலைக் கடனை கழிக்கச் சென்றார். நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்திருந்த நிலையில், அந்த தோப்பில் இருந்த  தென்னை மரம் உயரழுத்த மின் கம்பியில் விழுந்ததில், மின்கம்பி  அறுந்து கீழே கிடந்துள்ளது.  இதை கவனிக்காமல் மிதித்த  ரஞ்சித்குமார்   மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே  பலியானார்.

உயிரிழந்த ரஞ்சித்குமாருக்கு, மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து, சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் விசாரணை செய்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தார்

Tags:    

Similar News