உத்திரபிரதேசத்தில், பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து, கருப்பட்டியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்:

பிரியங்கா காந்தி கைது செய்ததைக் கண்டித்து சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-10-05 12:30 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

பிரியாங்க காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  சோழவந்தானில்  காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில், பிரியங்கா காந்தி கைது செய்ததைக் கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் போராட்டத்தின் போது , மந்திரி மகனால் கார் ஏற்றி ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தன. இதை கேள்வியுற்ற  காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  விவசாயிகளை நேரில் சென்று பார்க்கச் சென்றபோது  போலீஸார் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்எஸ் குருசாமி தலைமை வகித்தார். தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வருசை முகமது, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிவண்ணன், மனித உரிமைகள் துறை வட்டாரத் தலைவர் லெட்சர்கான், ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் மணி, அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், கிராம கமிட்டித் தலைவர் சோலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் முகமது இலியாஸ், கிராம கமிட்டித் தலைவர் நாராயணன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் புரோஸ்கான், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரத் செயலாளர் கணேசன், கண்ணையா மாரி, சந்தனம் ,பாக்கியம் ராஜ் ஆகியோர் பங்கேற்று உ.பி  பாஜக அரசைக்கண்டித்து  முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News