அலங்காநல்லூர் அருகே ஆலமரக்கிளை முறிந்து விழுந்தில் இளைஞர் மரணம்

இருவரும் பலத்த காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கர்ணன் இன்று காலை உயிரிழந்தார்

Update: 2021-10-05 11:30 GMT

பைல் படம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்யும்போது எதிர்பாராத விதமாக ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் இளைஞர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பன் தட்டை கிராமம், கல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கர்ணன்(21) . இவரும்,விஷ்ணு என்பவரும் அலங்காநல்லூர் அருகே கல்லணை அய்யனார் கோயில் ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்து கொண்டு இருந்தனராம். அப்போது எதிர்பாபாராத விதமாக,  மரக்கிளை திடீரென முறிந்து இருவர் மீது விழுந்ததாம். இருவரும் பலத்த காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கர்ணன் இன்று காலை  உயிரிழந்தார். விஷ்ணு மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News