அலங்காநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது
வேனில் கடத்தி வந்த 50 மூட்டை ரேஷன் அரிசி போலீஸார் பறிமுதல்
வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர் .
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக, இருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்( 31.) , மாரியப்பன்( 37). ஆகிய இருவரும், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியிலிருந்து, 50 கிலோ எடை கொண்ட 50 ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் கடத்தி வந்தனர். அப்போது, அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டியில், இரவு ரோந்து சென்ற சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி, அரிசி கடத்தி வந்த வேனை மடக்கிபிடித்தார். அரிசி கடத்தியதாக இருவரை கைது செய்து, மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தார்.