ஆலயங்களில் ஆடிப் பௌர்ணமி பூஜை: பெண்கள் அதிகளவில் வழிபாடு:
பௌர்ணமி பூஜை, சமூக இடைவெளியுடன் திரண்ட பெண்கள் கூட்டம்:
ஆடிப் பௌர்ணமியையொட்டி சோழவந்தான் பகுதியிலுள்ள ஆலயங்களில் பக்தர்கள் வழிபாடு
சோழவந்தான் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி மற்றும் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பெண் பக்தர்கள் உட்பட பக்தர்கள் அதிகமாக கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில்ஆடிபவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,தயிர்,திருமஞ்சன உள்பட 21 அபிஷேகங்கள் நடந்தத.பின்னர் அம்மன் அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சண்முகவேல் அர்ச்சகர் பூஜைகள் செய்தார். விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், தென்கரை அகிலாண்டேஸ்வரிஅம்மன்கோவில்,உச்சி மாகாளியம்மன்கோவில்,முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவில், திருவேடகம் துர்க்கைஅம்மன்கோவில், சோழவந்தான் நாடார் தெரு பத்திரகாளியம்மன் கோவில், துரோபதி அம்மன்கோவில், பூ மேட்டு தெரு காளியம்மன் கோவில், வடக்கத்தி காளியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி மற்றும் ஆடிபவுர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோவில் முன்பாக கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர்.பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதே போல், மதுரை, மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், ஆடிப் பௌர்ணமி பூஜை நடைபெற்றது.