சாலைவிபத்து: வேன் டிரைவர், விவசாயி மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது
விவசாயி தாக்கப்பட்டதை அறிந்த அவரது கிராமத்தினர் சம்பவ இடத்துக்கு ஆத்திரத்துடன் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
மதுரை அருகே விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் மற்றும் அதில் வந்த விவசாயியை தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்( 3) என்ற சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, கொய்யாப்பழம் ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால், தலையில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள், வேனை ஓட்டி வந்த டிரைவரையும், அதி்ல் இருந்த முடுவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன்( 45) என்பவரையும் தாக்கினர். இதில் விவசாயிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவறிந்த விவசாயி ராமச்சந்திரனின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு ஆத்திரத்துடன் திரண்டு வந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்று சமாதானம் செய்ததால், பெரிய மோதல் நடக்காமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, விவசாயியை தாக்கிய ராஜேஷ்கண்ணன்(24.), பூசகருப்பு(19.), விஜய்(27), மகாராஜன்(38), முத்துப்பாண்டி (20) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செய்தனர். மேலும், சிறுவன் மீது மோதிய வேன் டிரைவர் ஜெகதீசன்(28) என்பவர் மீது வாகன விபத்து வழக்கும் பதிவுசெய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.