பிரதமர் மோடி பிறந்த நாள் விழா: அலங்காநல்லூர் கோயிலில் சிறப்பு யாகம்
பாரத பிரதமர் மோடி பிறந்த தினம்: கோயிலில் சிறப்பு யாகம்.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கோயிலில் சிறப்பு யாகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி 71-ஆவது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை, கலைவாணர் நகரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொது செயலாளர் கோவிந்தமூர்த்தி, மீனவரணி மாநில செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடகப்பிரிவு ராஜதுரை, சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் உள்ள கிளைகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.