மதுரை அருகே கல் உடைக்கும் நிறுவனத்தின் காவலாளி தூக்கிட்டு தற்கொலை
கிரஷரில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே இளைஞர் கல் உடைக்கும் ஆலையில் பணியாற்றி வந்த காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மூக்கொண்டபள்ளியைச் சேர்ந்தவர் பிந்திநாத்ஜா. இவரது மகன் முன்னப்ப குமார்(32).பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி மலைப்பகுதியில் கல் உடைக்க "கிரஷர்" அமைக்கவுள்ள இடத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் தங்கியிருந்த, கொட்டகையின் மேற்கூரையின் கொக்கியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து, அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.