மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அலங்காநல்லூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
அலங்காநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு , தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு தலைமை தாங்கினார். வடக்கு வட்டார த் தலைவர் காந்தி, மாவட்ட மனித உரிமைகள் துறை தலைவர் ஜெயமணி, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக் கனி, ஒன்றிய துணைத் தலைவர் மலைராஜன், மனித உரிமை வட்டாரத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் , ஒவ்வொரு நாளும் விளையாடிக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், சுமார் 30- க்கும் மேற்பட்ட காங்கிரசார் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.