பரவை பேரூராட்சி பகுதி இருட்டா கிடக்குது லைட்டை போடுங்க : மக்கள் கோரிக்கை

மதுரை வாடிப்பட்டி அருகே பரவை பேரூராட்சி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் விளக்கு பொருத்த கோரிக்கை.;

Update: 2022-06-02 21:15 GMT

காட்சி படம் 

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி  பரவை பேரூராட்சி 12வது வார்டு மகா கணபதி நகர் 5வது தெருவில் மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.

இரவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இப்பகுதி வீடுகளில் குடியிருப்போர் வெளியேவர தயங்குகின்றனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது.

இதனால் இந்த பகுதியில் தேவையான மின் விளக்குகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News