சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி: மதுரை எம்பி வழங்கல்
பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனு தவிகளை, மதுரை எம்பி சு.வெங்கடேசன் வழங்கினார்
மதுரை மாநகராட்சி பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்
மதுரை மாநகராட்சி தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில், பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.22.40 லட்சத்திற்கான கடன் உதவிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த் மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியுடன் அனைத்து முன்னோடி வங்கிகள் இணைந்து அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முதல் கடனுதவி 20906 பயனாளிகளுக்கு வழங்குவதற்கு இலக்கு குறியீடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முதல் கடனுதவி பெறும் 13545 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக கடன் உதவி தொகை ரூ.10000ம் இரண்டாம் கட்டமாக 5103 பயனாளிகளுக்கு கடன் தவணை தொகையாக ரூ.20000ம் மூன்றாம் கட்டமாக 787 பயனாளிகளுக்கு ரூ.50000ம் என, மொத்தம் 19435 பயனாளிகள் கடனுதவி மூலம் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டம் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 151 பயனாளிகளுக்கு எட்டு வங்கிகள் மூலம் மொத்தம் ரூ.21.40 லட்சத்திற்கான கடன் உதவிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் ஆகியோர் காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ,துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, வாசுகி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் வரலெட்சுமி உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவிப்பொறியாளர் பொன்மணி சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் , மாமன்ற உறுப்பினர் முருகன் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.