சோழவந்தான் அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
சோழவந்தான் அருகே பானாமூப்பன்பட்டி கிராமத்தில் கலைஞர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டி கிராமத்தில் கலைஞர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி, முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவஅலுவலர் பாண்டியராஜன், தலைமைஆசிரியர் மீனா ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜதுரைபாண்டி வரவேற்றார்.
இம்முகாமில், மருத்துவர்கள் விஜயலட்சுமி, ஆர்த்தி,ராமச்சந்திரன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில், சுகாதார ஆய்வாளர்கள் முத்து மாயன், விக்கிரமங்கலம் சுரேஷ், செல்லம்பட்டி சுரேஷ், அருள்,சோலைமலைசெல்வன் உட்பட 60 முன்கள மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.
அங்கன்வாடி மேற்பார்வையாளர் கருப்பாயி உள்பட பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கண்காட்சி வைத்திருந்தனர். ஊராட்சி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
இம்முகாமில், பானாமூப்பன்பட்டி, போலக்காபட்டி, கரட்டுப்பட்டி, காந்திநகர், ரெட்டியபட்டி உள்பட இப்பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் இந்த சிறப்பு முகாமில் 750 பேர் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் இலவசமாக பெற்றுச் சென்றனர்.