முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்: அலங்காநல்லூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்
கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையில், ஜெயலலிதா உருவப் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர்
அலங்காநல்லூர் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடினர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்74- ஆவது பிறந்தநாளை ஒட்டி, அலங்காநல்லூர் நேதாஜி நகரில் கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையில், ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ,கிளைச் செயலாளர் கருப்பணன், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் முனியசாமி, சிறுபான்மை மாவட்ட செயலாளர் ரூபன், பாபு, முத்துக்கருப்பன், கல்லணை ராஜேந்திரன், சண்முகம், புதுப்பட்டி கணேசன், செல்வராஜ், மொபைல் வீர சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.