குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் திருவிளக்கு பூஜை
அண்ணாமலையார் கோயிலில், திருவிளக்கு பூஜை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்துள்ள குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து வரலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோபிநாத் மற்றும் ராஜேஸ்வரி கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.