அலங்காநல்லூர் அருகே தேவசேரி மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி மற்றும் பரிவார தேவதைகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2022-09-02 09:30 GMT

தேவசேரி மந்தையம்மன், கருப்பணசாமி பரிவார தேவதைகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி மற்றும் பரிவார தேவதைகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் முன்பாக யாக வேள்விகளும், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கடஸ்தாபனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி பூஜையும், மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் பக்தர்களுக்கு, கோயில் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News