சோழவந்தான் அருகே கொடிமங்கலம் மற்றும் தேனூர் கிராம கோவில்களில் குடமுழுக்கு விழா

சோழவந்தான் அருகேயுள்ள கொடிமங்கலம் மற்றும் தேனூரில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது

Update: 2023-11-23 09:45 GMT

சோழவந்தான் அருகே ,கொடிமங்கலம் திரிபுரசுந்தரி ஆலயத்தில் நடந்த  மகா கும்பாபிஷேகம்.

சோழவந்தான் அருகே கொடிமங்கலம் ஸ்ரீ பெரிய புன மங்கைபால திரிபுரசுந்தரி கோவிலில் கும்பாபிஷேக விழா

சோழவந்தான் அருகே கொடிமங்கலம் கிராமத்தில் உள்ள பாலாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியபுனமங்கை என்ற ஸ்ரீ பாலதிரிபுர சுந்தரிஅம்மன் மகா கும்பாபிஷேக விழா நான்கு நாட்கள் நடந்தது.

முதல் நாள் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்று புனித நீர் வழிபாட, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் கோ பூஜை நடைபெற்று மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களைஈர்ப்பு வழிபாடு நடைபெற்றது. மூன்றாம் நாள் காலை மங்கள இசை உடன் இரண்டாம் கால வேள்வி வழிபாடு, மூன்றாம் கால வழிபாடு நடைபெற்று மருந்து சாத்துதல் நடந்தது. நான்காம் நாள் அதிகாலை நான்காம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து நிர்வாகிகள் தலைவர் தங்கவேலு, செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் ரத்தின சபாபதி, துணைத்தலைவர் சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். திருக்கயிலை சிவ பூதக திருக்கூட்டம் திருக்குடந்தை பாலாஜி முன்னிலையில் விமானத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

இதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. கொடிமங்கலம் பெரியபுனமங்கை சந்தனகருப்புசாமி சோனைமுத்தையா கோவில் அறக்கட்டளை மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நாகமலை புதுக்கோட்டை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

சோழவந்தான் அருகே தேனூர் சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா:

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரவி பட்டாச்சாரியார், வீரராகவன் தலைமையிலான வேதியர்கள் குழு முதலாம் காலயாக பூஜையினை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கினர். தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புதன்கிழமை இரண்டாம் காலயாக பூஜையும் மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது .

தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி, கோ பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து ,காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் அதிர்வேட்டுகள் முழங்க கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது ‌. தொடர்ந்து, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ லிங்கோத் பவர் ஸ்ரீ நந்தி பகவானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, திருப்பணி விழா குழுவினர் மற்றும் தேனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News