சோழவந்தான் அருகே கீழே கிடந்த கொலுசை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்கள்
சோழவந்தான் அருகே கீழே கிடந்த கொலுசை எடுத்த மாணவர்கள் அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த வெள்ளி கொலுசை விக்கிரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் இந்த செயலை போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு சி பிரிவை சேர்ந்த ஆறு மாணவர்கள் நேற்று மதியம் ரோட்டில்கீழே கிடந்த வெள்ளி கொலுசை கண்டெடுத்தனர்.
பின்னர் மாணவர்கள் விக்கிரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து விக்கிரமங்கலம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் காமாட்சியிடம் வெள்ளி கொலுசை ஒப்படைத்தனர். கீழே கிடந்த வெள்ளி கொலுசை போலீசாரிடம் ஒப்படைத்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேரையும் போலீசார் பாராட்டினார்கள். கீழே கிடந்த கொலுவை எடுத்து வைத்துக்கொள்ளாமல் அதனை சமூக விழிப்புணர்வு நோக்கில் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு செய்த மாணவர்களின் நேர்மையை போலீசார் மட்டும் இன்றி கிராம பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.