அலங்காநல்லூரில் கருணாநிதி நினைவு நாள்: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அலங்காநல்லூர் அருகே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எம்.எல்.ஏ வெங்கடேசன் வழங்கினார்.

Update: 2021-08-06 11:10 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தனிச்சியம் மருது ஏற்பாட்டில் 300க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு மாரி செல்லபாண்டி, யூனியன் சேர்மன் பஞ்சு அழகு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், சமூக நலத்துறை பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் முத்துபாண்டி, நிர்வாகிகள் சி.பி.ஆர். சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மதுரை

Tags:    

Similar News