சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்..!

சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-08-07 12:51 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு.

சோழவந்தான்:

முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அவரின் திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன்,சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் சோழவந்தான் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஐயப்பன், நிர்வாகிகள்சி .பி .ஆர். சரவணன், முத்துச் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிபள்ளம் கிராமத்தில் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமையில் திமுகவினர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதில், திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பகுதியில் பேரூர் துணைச் செயலாளர் சோழவந்தான் ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு, மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும் 1வது வார்டு திமுகவினர் கலந்து கொண்டனர் சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் தொழிற்சங்கத்தினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் ஹபீப் முகமது உட்படபலர்கலந்து கொண்டனர்இதேபோல் வாடிப்பட்டி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளை கழகங்களில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர். இதில், அந்தந்த பகுதியை திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News