அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டியில் கருணாநிதி பிறந்த நாள் கூட்டம்
Karunanidhi birthday public meeting at Kalvelipatti near Alankanallur;
மதுரை வடக்கு மாவட்டம் திமுக சார்பில், அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் கல்வேலி பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது .
இந்த விழாவிற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். விஜயன், கிழக்கு ஒன்றியச் செயலாளர், கென்னடி கண்ணன், பொதுக்குழு தனராஜ், பாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஒன்றியக்கவுன்சிலர் ஜெகதீஸ்வரி, தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை பற்றி பேசினார் .இதில், தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் சுந்தரராசன் விளக்கிப் பேசினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், அலங்காநல்லூர் ஒன்றியம்
தலைவர் பஞ்சு அழகு, துணைத்தலைவர் சங்கீதா மாறன், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன் பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியன்,துணைத் தலைவர் ராமராஜ், கல்வேலி பட்டிஅருண்குமார், ஜெயப்பிரகாஷ், சுந்தர்ராஜ் ரத்தினம், அமுதன் ,வடிவேல். உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் மருது நன்றி கூறினார்.