வாடிப்பட்டி பகுதியில் கல்வி வளர்ச்சி நாள்:
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில்,அரசு பள்ளிகளில் கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட்ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன் முன்னிலை வகித்தார்.
ஓவிய ஆசிரியர் ரெஸிஸ்ராணி வரவேற்றார். இதில்,கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நில நன்கொடையாளர் தேசபந்து சக்கரவர்த்தி, பரிசுகள் வழங்கினார். முடிவில், தமிழாசிரியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பிரேமா முன்னிலை வகித்தார். கணினிஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். இதில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் வீரதேவன், காமராஜரின் சாதனைகள் பற்றி விளக்கி பேச்சுப் போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்சசி நடந்தது.
முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார். தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஞானமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பரமசிவம் கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ரெங்கநாயகி, பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில், தமிழாசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
பொட்டுலுப்பட்டி
பொட்டுலுப்பட்டியில், அரசு உதவிபெறும் காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளிக் குழுத் தலைவர் பொறியாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலெட்சுமி வரவேற்றார். இந்தவிழாவில், காமராஜர் பவுன்டேசன் செயலாளர் டாக்டர் சுல்தான் சம்சூல்கபீர் காமராஜரின் சாதனை சரித்திரம் என்ற தலைப்பில் பேசி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கினார். இதில், வழக்கறிஞர் அஜ்மல், ஜெகன்குமார், பாலசரவணன், சத்தியலிங்கேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்சசியினை, ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் எஸ்டர் டார்த்தி நன்றி கூறினார்.