மதுரை; திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்பதரு நாள்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக் கூடத்தில் கல்பதரு நாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-04 16:55 GMT

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல் பத்ரு நாள் நிகழ்ச்சி நடந்தது. 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக் கூடத்தில், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பக்தர்களுக்கு அருள் மற்றும் ஞானத்தை வழங்கிய , கல்பதரு நாளாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி நியமனந்தா ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பெருமைகள் குறித்து உரையாற்றினார். கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோனத்தின் மகாசபை உறுப்பினர் கந்தசாமி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பஜனை குழு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம் மற்றும் பஜனை குழு மாணவர்கள் நாமாவளி, தினசரி தியானம், காயத்ரி மந்திரம் மற்றும் பஜனை பாடல்கள் பாட அனைத்து மாணவர்களும் இறைவனை வழிபட்டனர்.


பேராசிரியர்கள் மற்றும் குருகுல ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர், முனைவர் காமாட்சி, இரகு, முனைவர் பிரேமானந்தம், முனைவர் எல்லைராஜா, முனைவர் சௌந்தர்ராஜு, மாரிமுத்து, நாகராஜ், முனைவர் குமாரசாமி, முனைவர் முருகன், முனைவர் செல்வராஜ், முனைவர் மோகன், பிரசாந்த் சுதிகுமார் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Similar News